Select Location
All Locations
State
Region
City / District
LIVE
சீதையாக நான் நடிக்க வேண்டியதா? ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம்!

சீதையாக நான் நடிக்க வேண்டியதா? ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம்!

நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி சீதையாக நடிக்க வேண்டியது எனப் பரவிய தகவல் குறித்து அவர் பதிலளித்துள்ளார். இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் நடிகர்கள் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் நடிப்பில் ‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகத்திற்கான டிரைலர் சில நாள்களுக்கு முன் வெளியிடப்பட்டது.

நேரடியாக ஹிந்தியில் எடுக்கப்பட்ட இப்படம் மற்ற பான் இந்திய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. இதில், ராமராக நடிகர் ரன்பீர் கபூரும் சீதையாக நடிகை சாய் பல்லவியும் நடித்துள்ளனர். சாய் பல்லவி சரியாகப் பொருந்தவில்லை என ரசிகர்கள் விமர்சித்தனர். அந்த நேரத்தில் முதலில் இப்படத்தில் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டிதான் நடிக்க வேண்டியது அவர்தான் மறுத்திவிட்டார் எனத் தகவல் பரவியது.

இந்த நிலையில், இதுகுறித்து பேசிய நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, “சீதையாக நடிக்க முதலில் எனக்கு வாய்ப்பு வந்ததாகப் பலரும் கூறுகின்றனர். அதில் உண்மையில்லை. நான் ஆடிஷனுக்கு சென்றேன். ஆனால், தேர்வாகவில்லை. என்னால்தான் சாய் பல்லவிக்கு வாய்ப்பு கிடைத்தது என்பதும் தவறான தகவல். இது வெறும் வதந்திதான்” எனத் தெரிவித்துள்ளார்.


Dinamani 42 minutes ago
Home Flash News