Select Location
All Locations
State
Region
City / District
பொதுப் பிரச்சினைகளை அறிய தேசிய அளவில் பிரச்சாரக் குழு:

பொதுப் பிரச்சினைகளை அறிய தேசிய அளவில் பிரச்சாரக் குழு: சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே அறிவிப்பு

புதுடெல்லி: கரப்​பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நிறு​வனர் அபிஜித் திப்கே செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: சிஜேபி அமைப்பை அரசி​யல் கட்​சி​யாக மாற்​றும் எந்த எண்ணமும் எங்​களுக்கு இல்​லை. குறிப்​பாக எங்​கள் அமைப்பை எவ்​வாறு விரிவுபடுத்​து​வது, மக்​களின் நலனுக்​காக நாம் எடுக்க வேண்​டிய பிரச்​சினை​களைக் கண்​டறிவது மற்​றும் இயக்கத்துக்கான வரைபடத்தை உரு​வாக்​கு​வது குறித்து விவாதிப்​போம்.

விரை​வில் தேசிய அளவில் பிரச்​சா​ரக் குழு ஒன்றை அமைத்​து, ‘மக்கள் என்ன சொல்​கிறார்​கள்’ (க்யா போல்தி பப்​ளிக்) என்ற பெயரில் பிரச்​சினை​களைக் கண்​டறிவோம். இந்​தப் பிரச்​சா​ரத்​தின் முதல் கவனம் கல்​வி​யின் மீதே இருக்​கும். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​. சிஜேபி நிர்வாகிகள் இந்​நிலை​யில் சிஜேபி அமைப்பின் தேசிய செயற்​குழு நிர்​வாகி​கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அமைப்​பின் தேசிய ஒருங்​கிணைப்​பாள​ராக அபிஜித் திப்​கே​வும், இணை ஒருங்​கிணைப்​பாளர்​களாக செய்​தித் தொடர்​பாளர்​கள் சவுரவ் தாஸ், ஆஷுதோஷ் ரங்கா​வும் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்​.


Hindu Tamil 51 minutes ago
Home Flash News