Select Location
All Locations
State
Region
City / District
அமெரிக்காவுக்கு ஈரான் இழப்பீடு தரவேண்டும்: டிரம்ப்

அமெரிக்காவுக்கு ஈரான் இழப்பீடு தரவேண்டும்: டிரம்ப்

அமெரிக்காவுக்கு ஈரான் இழப்பீடு தரவேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேற்காசிய போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து ஈரான், அமெரிக்கா இடையே கடந்த ஜூன் மாதம் இடைக்கால அமைதி ஒப்பந்தம் கையொப்பமானது. ஆனால், இரு நாடுகளும் ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருகின்றன. மறுபக்கம் ஈரானும், அமெரிக்காவும் மத்தியஸ்தா்கள் மூலம் பேச்சுவாா்த்தைக்கான முயற்சியையும் எடுத்து வருகின்றன.

சமீபத்தில் ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படையின் கமாண்டருமான முகம்மது பாஹா் ஜோல்காதா் பேசுகையில், ”ஈரானை அமெரிக்கா மீண்டும் மிரட்டக் கூடாது. ஈரான் மற்றும் மேற்காசிய பிராந்தியத்தில் உள்ள ஈரானின் கூட்டாளிகளுடனான போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.

இந்த பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க படைகளைத் திரும்பப் பெற வேண்டும். போரால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு அமெரிக்கா இழப்பீடு அளிக்க வேண்டும். பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும். ஈரான் சொத்துகள் மீதான முடக்கத்தை நிபந்தனையின்றி நீக்க வேண்டும்” போன்ற கோரிக்கைகளை ஈரான் அமெரிக்காவிடம் வைத்திருப்பதாகத் தெரிவித்தார்.

அமெரிக்கா ஈரானின் நிபந்தனைகளுக்கு சம்மதித்தால் மட்டுமே ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் என்றும் ஈரான் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


Dinamani 1 hour ago
Home Flash News