Select Location
All Locations
State
Region
City / District
LIVE
ஜார்க்கண்ட் போராட்டம்: ராகுல் காந்திக்கு புதுச்சேரி பாஜக சரமாரி கேள்வி

ஜார்க்கண்ட் போராட்டம்: ராகுல் காந்திக்கு புதுச்சேரி பாஜக சரமாரி கேள்வி

புதுச்சேரி: ‘ஜார்க்கண்டில் நடத்தப்பட்ட போராட்டத்துக்கு எந்தக் கருத்தையும் சொல்லாமல் ஏன் மவுனமாக இருக்கிறார்’ என்று ராகுல் காந்திக்கு புதுச்சேரி பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் போராடிய மாணவர்கள் மீது பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவது போன்று ஆளும் ஜார்க்​கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி அரசு தாக்கியுள்ளது. 

இதனை வன்மையாக பாஜக கண்டிக்கிறது. நீட் தேர்வில் தவறுகள் நடந்தது தெரிந்ததும் மத்திய பாஜக அரசு அந்தத் தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வுக்கு உத்தரவிட்டது. மேலும், டெல்லி ஜந்தர் மந்தரில் இது தொடர்பாக மாணவர்கள் போராட்டம் நடந்தபோது கடுமையான சட்டத்தையும் மத்தியில் உள்ள பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது.


Hindu Tamil 1 hour ago
Home Flash News