ரிஷிகாந்த், அனிஷ்மா நடித்த மொத ராத்திரி டிரைலர்!
முகப்பு / செய்திகள் செய்திகள் ரிஷிகாந்த், அனிஷ்மா நடித்த மொத ராத்திரி டிரைலர்! மொத ராத்திரி திரைப்படத்தின் டிரைலர்... News image மொத ராத்திரி டிரைலர் போஸ்டர் Updated On : 13 ஆகஸ்ட் 2026, 11:50 am IST Add as a preferred source on Google இணையதளச் செய்திப் பிரிவு நடிகர்கள் ரிஷிகாந்த், அனிஷ்மா நடிப்பில் உருவான மொத ராத்திரி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் அனிஷ்மா அனில்குமார், ரிஷிகாந்த் நடிப்பில் உருவான திரைப்படம் ’மொத ராத்திரி’.
புதிதாகத் திருமணமான ஜோடியின் வாழ்வில் நடைபெறும் காதல் - நகைச்சுவைத் தொடர்பான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் மைத்ரி தமிழில் தயாரித்த மூன்றாவது திரைப்படமாகும். இப்படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். இந்த நிலையில், இப்படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர். திருப்பங்கள் கொண்ட திருமணக் காட்சிகள் படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. மொத ராத்திரி ஆகஸ்ட் 21 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.