எப்படி இருக்கிறது விஜய்யின் 100 நாள் ஆட்சி?
மிழ்நாட்டில் 59 ஆண்டு கால திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை வீழ்த்தி, தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்து இரண்டே ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்த விஜய், முதல்வராக 100 நாட்களை நிறைவுசெய்திருக்கிறார். இந்த 100 நாட்கள் ஆட்சி எதிர்பார்ப்புகள், பாராட்டுகள் மற்றும் விமர்சனங்கள் நிறைந்த ஒரு தீவிர அரசியல் விவாதப் பொருளாக மாறியுள்ளது. "மாற்றம்" என்ற முழக்கத்தோடு ஆட்சியில் அமர்ந்த விஜய் இந்த 100 நாட்களில் உண்மையிலே மாற்றத்தைத் தந்திருக்கிறாரா? தந்திருக்கிறார் என்றால் எப்படியான மாற்றம்? பார்க்கலாம். https://www.sindhai.com/essays/how-is-vijays-100-day-rule-1345363
நிறைகள் என்னென்ன?
விஜய் அரசின் முதல் சாதனை அதன் சமூகக் கட்டமைப்பில் பிரதிபலிக்கிறது. தமிழ்நாட்டின் சட்டமன்ற வரலாற்றிலேயே இல்லாத அளவுக்குச் சமூக நீதியும் பன்மைத்துவமும் அமைச்சரவையில் நிலைநாட்டப்பட்டுள்ளது. அமைச்சரவையில் 8 தலித் அமைச்சர்கள், 4 சிறுபான்மையின அமைச்சர்கள் மற்றும் முக்கியத் துறைகளில் 4 பெண் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருப்பது அதிகாரப் பரவலாக்கத்தின் முக்கியச் சான்றாகும். சாமானியர்களும், 35 வயதுக்குட்பட்ட அதிக அளவிலான இளம் எம்எல்ஏக்களும் (25 முதல் 35 வயதுள்ள எம்எல்ஏக்கள் 21 பேர் தவெகவைச் சேர்ந்தவர்கள்), இளம் அமைச்சர்களும் அதிகார மையத்துக்கு வந்திருப்பது புதிய தலைமுறை அரசியலுக்கு வழிவகுத்துள்ளது.
https://www.sindhai.com/essays/how-is-vijays-100-day-rule-1345363
குறுகிய காலத்தில் விஜய் அரசின் பெரும் சாதனையாகப் பரவலாகப் பேசப்படுவது அரசு நிர்வாகத்தில் லஞ்சம் மற்றும் ஊழல் குறைந்திருக்கிறது என்பதைப் பற்றித்தான். ஊழல் ஒழிப்புக்காக பிரத்யேக வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டு, மக்கள் நேரடியாகப் புகாரளிக்கும் முறை ஊக்குவிக்கப்படுகிறது. லஞ்சம், ஊழல் குறைந்திருக்கிறது என்று பலரும் சமூக ஊடகங்களில் தங்கள் தனிப்பட்ட அனுபவங்களைப் பதிவு செய்துவருவதைப் பார்க்க முடிகிறது. https://www.sindhai.com/essays/how-is-vijays-100-day-rule-1345363
கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களித்ததை தவெக அரசின் குறிப்பிடத்தக்க சாதனையாகப் பாராட்டலாம். சிறுபான்மை அரசு என்பதால் இது நிகழ்ந்திருக்கிறது என்று கூறினால் இதற்கு முன்பு சிறுபான்மை அரசு அமைத்த திமுக தனது கூட்டணிக் கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு தரவில்லை என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும். தங்கள் வெற்றிக்குப் பங்களித்த கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக, அதிமுக இரண்டுமே அதிகாரத்தில் பங்களித்ததில்லை. அந்தச் சூழலை அடியோடு மாற்றியிருக்கிறது விஜய்யின் அரசு. இனி எப்போதும் கூட்டணி ஆட்சிதான் என்ற நிலையை விஜய் அரசு ஏ https://www.sindhai.com/essays/how-is-vijays-100-day-rule-1345363
200 யூனிட் வரை இலவச மின்சாரம் என்ற தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டிருக்கிறது. காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படுவது குறித்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. https://www.sindhai.com/essays/how-is-vijays-100-day-rule-1345363
குறைகள் என்னென்ன?
ஆட்சியின் தொடக்கக் காலத்தில் குறிப்பிடத்தக்க சாதனைகள் இருந்தபோதிலும், பல முக்கிய விவகாரங்களில் அரசின் செயல்பாடுகள் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளன.
https://www.sindhai.com/essays/how-is-vijays-100-day-rule-1345363
அரசுக்கும் மக்களுக்கும் இடையே பாலமாக இருப்பவை ஊடகங்கள். ஆனால், ஊடகங்களைச் சந்திப்பதைத் தொடர்ந்து முதல்வர் தவிர்த்து வருகிறார். பிரதமரைச் சந்திக்க டெல்லி சென்றபோதும் ஊடகச் சந்திப்பை விஜய் தவிர்த்தது பெரும் விவாதத்துக்கு உள்ளானது. மேலும், முதல்வரின் பல நிகழ்வுகளுக்கு நேரடி ஊடக அனுமதி மறுக்கப்பட்டு, செய்தி ஒளிபரப்புத் துறை வழங்கும் நேரலையையே ஊடகங்கள் நம்பியிருக்கும் சூழல் நிலவுகிறது. விஜய்யின் முகத்தையும் குரலையும் வீடுதோறும் எடுத்துச் சென்றவை இந்த ஊடகங்கள்தான் என்பதை மறந்துவிடலாகாது. https://www.sindhai.com/essays/how-is-vijays-100-day-rule-1345363