உலகக் கோப்பை மகளிர் ஹாக்கி: இந்தியா - சீனா மோதிய ஆட்டம் டிரா
ஆம்ஸ்டெல்வீன்: உலகக் கோப்பை ஹாக்கி மகளிர் லீக் போட்டியில் இந்தியா, சீனா அணிகளிடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது உலகக் கோப்பை ஹாக்கி தொடர் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
நேற்று முன்தினம் நடைபெற்ற ஆடவர் பிரிவு லீக் போட்டியில் இந்திய ஆடவர் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியை வீழ்த்தியது. இந்நிலையில் நேற்று மாலை டி பிரிவில் நடைபெற்ற மகளிர் பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தியா, சீனா அணிகள் மோதின.
இந்திய அணி தொடக்கத்திலேயே முதல் கோலை அடித்து முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் 8-வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை நவ்நீத், ஃபீல்டு கோலையடித்து அணிக்கு 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுத் தந்தார்.
ஆனால், ஆட்டத்தின் 15-வது நிமிடத்தில் சீன அணி ஒரு கோலடித்து 1-1 என்ற கணக்கில் சமநிலையை ஏற்படுத்தியது. சீன வீராங்கனை ஜாங் யிங், இந்த கோலை பெனல்டி ஸ்டிரோக் மூலம் அடித்தார். இதையடுத்து ஆட்டத்தின் 25-வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை தீபிகா தனக்குக் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக அற்புதமான மாற்றினார். இதனால் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதையடுத்து இந்திய அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆட்டத்தின் 29-வது நிமிடத்தில் சீன அணிக்கு ஒரு பெனல்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது.
தென் ஆப்பிரிக்காவுடன் மோதல் இதைத் தொடர்ந்து நாளை (ஆகஸ்ட் 18) நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்க மகளிர் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இன்று நடைபெறும் ஆடவர் லீக் ஆட்டத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.