தவெக அரசால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி: கனிமொழி எம்.பி. கண்டனம்
சென்னை: உதவித்தொகையை வழங்காமல் தவெக அரசு மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், மலேசிய தேசியப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலுள்ள உயர்கல்வி நிலையங்களில் பயிலும் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உதவித்தொகையை வழங்காமல், அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது த.வெ.க. அரசு. தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் என்பதற்காக, இதையும் திட்டமிட்டு மறைமுகமாக செயலிழக்கச் செய்து நிறுத்துவதுதான் இந்த அரசின் நோக்கமா? உடனடியாக நிலுவையிலுள்ள உதவித்தொகையை விடுவித்து, மாணவர்களின் கல்வியைத் தடையின்றி தொடரச் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.