ஊழல் தொடர்பான அனைத்து ஆதாரங்களும் என் மேஜையில் தான் உள்ளது- முதலமைச்சர் விஜய்
ஐ பெரியசாமி பேசுகையில், நான் அன்பாக, அக்கறையாக, ஆசையாக பேசியதால் தான் மக்கள் என்னை 7 முறை எம்எல்ஏவாக வெல்ல வைத்துள்ளனர் என்றார்.
மக்களிடம் என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என்று எனக்கு தெரியும், பேசிவிட்டு தான் வந்துள்ளேன். நான் பேசுவேன், ஆனால் இடைத்தேர்தலிலாலவது சிலருக்கு நல்லது நடக்க வேண்டும் இல்லையா? என்றார்.
தமிழ்நாடு சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, தி.மு.க. எம்.எல்.ஏ. ஐ. பெரியசாமி பேசுகையில், வீடு கட்டும் திட்டத்தில் பெயரை மாற்றி விட்டு வீடுகளின் எண்ணிக்கையை தவெக அரசு குறைத்து விட்டது என்றார்.
அதற்கு அமைச்சர் ஆனந்த், வீடு கட்டும் திட்டத்தில் பல தவறுகள் நடந்துள்ளது என திட்டவட்டமாக நான் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். அதனை தொடர்ந்து பேசிய எம்.எல்.ஏ. ஐ. பெரியசாமி, அலுவலர்கள் தான் தேர்வு செய்கின்றனர். தவறு நடக்கிறது என்பதற்காக திட்டத்தை நிறுத்தக்கூடாது. கட்சி, சாதி மத பாகுபாடின்றி விண்ணப்பித்த அனைவருக்கும் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு தருவதற்கு முயற்சி. கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், அரசுக்கான இழப்பை குறைக்க உதவும். வீடு பெறும் பயனாளிகளை தேர்ந்தெடுப்பது அதிகாரிகள் அடங்கிய குழு தான் என்று பேசினார்.
சமஸ் தொகுத்த ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ புத்தகத்தை எ.வ.வேலு குறிப்பிட்டிருந்தார். விஜய் 100 : ஊழலுக்கு எதிரான ஓர் அடி என சமஸ் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். என்ன பேசினாலும் ஆதாரம் காட்டுங்கள் என எதிர்க்கட்சியினர் சொல்கிறார்கள். கடந்த ஆட்சியில் தவறுகள் ஏற்பட்டிருக்கலாம் என ஒப்புக்கொண்ட ஐ.பெரியசாமிக்கு நன்றி என்றார்.
முந்தைய ஆட்சியில் 3 துறைகளை ஆய்வு செய்த அறிக்கை என் மேஜையில் உள்ளது. கோப்புகள் என்னிடம் இருப்பதாக நிதியமைச்சர் கூறியிருந்தார். அது உண்மை தான். ஆதாரங்கள் அனைத்தும் என் மேஜையில் தான் உள்ளது. அந்த கோப்புகளை ஓபன் செய்ய வைத்துவிடாதீர்கள், எப்போது திறக்க வேண்டுமோ அப்போது திறப்போம். மக்களிடம் என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என்று எனக்கு தெரியும், பேசிவிட்டு தான் வந்துள்ளேன். நான் பேசுவேன், ஆனால் இடைத்தேர்தலிலாலவது சிலருக்கு நல்லது நடக்க வேண்டும் இல்லையா? என்றார்.
எம்எல்ஏ ஐ பெரியசாமி பேசுகையில், நான் அன்பாக, அக்கறையாக, ஆசையாக பேசியதால் தான் மக்கள் என்னை 7 முறை எம்எல்ஏவாக வெல்ல வைத்துள்ளனர் என்றார்.