Select Location
All Locations
State
Region
City / District
‘உசுர கொடுத்தாச்சும் ஜெயிச்சுருவேன்...’ - தீர்க்கமான முடிவில் ‘ஹாய்’ பட கவின்!

‘உசுர கொடுத்தாச்சும் ஜெயிச்சுருவேன்...’ - தீர்க்கமான முடிவில் ‘ஹாய்’ பட கவின்!

கவின் மற்றும் நயன்தாரா இணைந்து நடிக்கும் படம் ‘ஹாய்’. காதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கியுள்ளார். இப்படத்தை, ’7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் விக்னேஷ் சிவனின் ‘ரௌடி பிக்சர்ஸ்’ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. ஜென் மார்டின் இசையமைத்துள்ள இப்படம் காதல் பின்னணியில் உருவாகியுள்ளது. இப்படம் ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியாகிறது.

இந்த நிலையில் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இதில் கவின் மயில்சாமி என்ற கதாபாத்திரத்திலும் நயன்தாரா தேவயானி என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரெய்லரின் ஆர்மபத்தில் பாக்யராஜ் கவினை பார்த்து, ‘ஆம்பளைங்க வாழ்க்கை மூணு ரகம் தான், ஒன்னு காதலிச்சு கல்யாணம் பன்றது, இரண்டு கல்யாணம் பன்னிட்டு காதலிக்குறது, மூனாவது காதலிக்கவும் முடியாம, கல்யாணமும் நடக்காம வேஸ்ட் லக்கேஜா சுத்திட்டு இருக்குறது’ என் சொல்கிறார்.

பின்பு கவின் நயன்தாரா தன்னை பிடிக்கவில்லை என சொல்லியதாக தற்கொலைக்கு முயற்சிக்கிறார். பின்பு நயன்தாராவுக்கும் கவினுக்குமான காட்சிகள் இடம் பெறுகிறது. தொடர்ந்து இருவருக்கும் கல்யாண ஏற்பாடு நடக்க அதன் பின்பு என்ன நடக்கிறது என்பதை மைய்யமாக வைத்து இந்த கதை உருவாகியுள்ளது போல் டிரெய்லர் அமைந்துள்ளது. இதனுள்ளே காதல், பிரிவு, சோகம் என அனைத்தும் கலந்துள்ளது.

டிரெய்லரில் கவின் பேசும் சில வசனங்கள் கவனம் பெற்றுள்ளது. ‘நான் லவ் பன்ற தேவயானி என்ன லவ் பன்னாமலே என் பொண்டாட்டி ஆயிட்டா, இப்ப என் பொண்டாட்டியா வந்த லவ்வரு, உண்மையாவே என்ன லவ் பன்னனும் உண்மையாவே என் பொண்டாட்டி ஆகனும்’ என பேசுவது, ‘இதுவரைக்கும் ஈஸியா தோத்துட்டன், ஆனா இனிமே உசுர கொடுத்தாச்சும் ஜெயிச்சுருவேன்’ என்ற வசனமும் கவர்ந்துள்ளது.


Nakkeeran 3 hours ago
Home Flash News