தவெக அரசுக்கு நாங்கள் வேண்டுமா? அதிகாரிகள் வேண்டுமா? என பெ.சண்முகம் கேள்வி
சென்னை: முதலமைச்சர் விஜய் தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும் என்று சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளார். மார்க்சிஸ்ட் ஆதரவால்தான் தவெக ஆட்சி நடக்கிறது. தலைமைச் செயலாளரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். விவரம் தெரியாதவரை ஏன் தலைமைச் செயலாளராக்குகிறீர்கள்? அதிகாரிகளை வைத்துக்கொண்டு ஆட்சி நடத்தப் போகிறீர்களா? அல்லது கம்யூனிஸ்டுகளை வைத்துக்கொண்டு ஆட்சியை தொடரப் போகிறீர்களா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.