Select Location
All Locations
State
Region
City / District
`இனி மா.செ எண்ணிக்கை 110... அதிகபட்ச வயது 70; பதவிகளுக்கு புது ரூல்ஸ்!' - திமுக செயற்குழுவில் அதிரடி

`இனி மா.செ எண்ணிக்கை 110... அதிகபட்ச வயது 70; பதவிகளுக்கு புது ரூல்ஸ்!' - திமுக செயற்குழுவில் அதிரடி

தமிழ்நாட்டின் கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டதற்குச் சொல்லப்படும் முக்கியக் காரணங்களில் ஒன்று - திமுக சீனியர்கள் இன்னும் இளைஞர்களுக்கு வழிவிடாததே ஆகும்.

இந்த மாதிரியான குறைகளைக் கண்டுபிடிக்கக் குழு ஒன்றை அமைத்தார் திமுக தலைவர் ஸ்டாலின். அந்தக் குழுவின் பரிந்துரைப்படி, இன்று (ஆகஸ்ட் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

கழகத்தின் கட்டமைப்பில் புது ரத்தம் பாய்ச்சிட, கிளைக்கழகச் செயலாளருக்கான அதிகபட்ச வயது 45 என்றும், கிளைக்கழகச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாநகரங்களிலும், சூழலுக்கு ஏற்ப பிற மாநகராட்சிகளிலும் வட்டக்கழகங்களை வலிமைப்படுத்திடக் கிளைக்கழகம் அமைக்கப்படுகிறது. 45 வயதுக்கு மிகாதவர் கிளைச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே இப்பொறுப்பை வகிக்க முடியும்.

சென்னை மாநகராட்சியின் வட்டக்கழகங்கள் சராசரியாக 10 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும், பிற மாநகராட்சிகளில் சராசரியாக 5 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும் அமையும். மாநகர-நகர-பேரூர் வட்டக்கழகச் செயலாளர்களின் அதிகபட்ச வயது 50 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.

பேரூர் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 எனவும், அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே பொறுப்பை வகிக்க முடியும் எனத் தீர்மானிக்கப்படுகிறது.


Vikatan 1 hour ago
Home Flash News