Select Location
All Locations
State
Region
City / District
இந்திய அணி 503 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது: இலங்கை அணி தடுமாற்றம் | கொழும்பு டெஸ்ட்

இந்திய அணி 503 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது: இலங்கை அணி தடுமாற்றம் | கொழும்பு டெஸ்ட்

கொழும்பு: இலங்கை அணிக்கு எதி​ரான 2-வது மற்​றும் கடைசி டெஸ்ட் போட்​டி​யில் இந்​திய அணி முதல் இன்​னிங்​ஸில் 503 ரன்​கள் குவித்து டிக்​ளேர் செய்​தது. துருவ் ஜூரெல் 115 ரன்​களும், ரிஷப் பந்த் 63 ரன்​களும் விளாசி அசத்​தினர். இதையடுத்து விளை​யாடிய இலங்கை அணி 8 ரன்​களுக்கு 2 விக்​கெட்​களை இழந்​தது. கொழும்பு நகரில் உள்ள சிங்​களீஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்​தில் நடை​பெற்று வரும் இந்த போட்​டி​யில் டாஸ் வென்று பேட் செய்த இந்​திய அணி முதல் நாள் ஆட்​டத்​தில் 85 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 300 ரன்​கள் எடுத்​தது. 

தேவ்​தத் படிக்​கல் 117, ஷுப்​மன் கில் 50, யஷஸ்வி ஜெய்​ஸ்​வால் 45, ரவீந்​திர ஜடேஜா 43, கே.எல்​.​ராகுல் 18 ரன்​கள் சேர்த்து ஆட்​ட​மிழந்​தனர். துருவ் ஜூரெல் 7, சரண்ஷ் ஜெயின் 4 ரன்​களு​டன் ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர். நேற்று 2-வது நாள் ஆட்​டத்தை இந்​திய அணி தொடர்ந்து விளை​யாடியது. சரண்ஷ் ஜெயின் 6 ரன்​கள் எடுத்த நிலை​யில் அசிதா பெர்​னாண்டோ பந்​தில், 2-வது சிலிப் திசை​யில் கமில் மிஷா​ரா​வின் அபார​மான கேட்ச் காரண​மாக ஆட்​ட​மிழந்​தார்.

இதையடுத்து முதல் நாள் ஆட்​டத்​தில் காயம் காரண​மாக ‘ரிட்​டயர்டு ஹர்ட்’ முறை​யில் வெளி​யேறி இருந்த ரிஷப்​பந்த் களமிறங்​கி​னார். அதிரடி​யாக விளை​யாடிய ரிஷப் பந்த் 81 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 5 பவுண்​டரி​களு​டன் தனது 21-வது அரை சதத்தை கடந்​தார். இந்த ஜோடி​யின் சிறப்​பான ஆட்​டத்​தால் இந்​திய அணி 110-வது ஓவரில் 400 ரன்​களை கடந்​தது. மதிய உணவு இடைவேளை​யில் இந்​திய அணி 112 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 419 ரன்​கள் எடுத்​திருந்​தது. ரிஷப் பந்த் 63, துருவ் ஜூரெல் 59 ரன்​கள் சேர்த்து இருந்​தனர். மதிய உணவு இடைவேளைக்கு பின்​னர் கேஷரா நுவந்தா வீசிய முதல் பந்​தில் ரிஷப் பந்த் ஆட்​ட​மிழந்​தார். ரிஷப் பந்த் விளாசிய பந்து லாங் ஆஃப் திசை​யில் லகிரு உதரா​விடம் கேட்ச் ஆனது. ரிஷப் பந்த் 89 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 6 பவுண்​டரி​களு​டன் 63 ரன்​கள் சேர்த்​தார். 7-வது விக்​கெட்​டுக்கு ரிஷப் பந்த், துருவ் ஜூரெல் ஜோடி 112 ரன்​கள் குவித்​தது.


Hindu Tamil 33 minutes ago
Home Flash News