Select Location
All Locations
State
Region
City / District
Operation Economic Outcast: 'ஈரானுக்கு இரண்டே வழிகள்தாம்' - அமெரிக்கா கொடுக்கும் சாய்ஸ்கள் என்னென்ன?

Operation Economic Outcast: 'ஈரானுக்கு இரண்டே வழிகள்தாம்' - அமெரிக்கா கொடுக்கும் சாய்ஸ்கள் என்னென்ன?

ஈரான் போர் தொடங்கிக் கிட்டத்தட்ட 6 மாதங்கள் ஆகிவிட்டன. ராணுவத்தின் மூலம் ஈரானை அமெரிக்காவால் வழிக்குக் கொண்டுவர முடியவில்லை. இதனால், பொருளாதாரத் தடை அஸ்திரத்தைக் கையில் எடுத்துள்ளது அமெரிக்கா.

கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 19), அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ‘பொருளாதார D-Day’-ஐ அறிவித்தார். இதன்படி, ஈரானுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகளுக்கு அமெரிக்காவின் தடைகள் பாயும்

இந்தத் தடைகள் குறித்து நேற்று அமெரிக்காவின் நிதித்துறைச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் விளக்கியுள்ளார். ட்ரம்பின் அரசாங்கம் இந்தத் தடைக்கு வைத்துள்ள பெயர் – ‘ஆபரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட்’ (Operation Economic Outcast).

இந்தத் தடைகள் குறித்து ஸ்காட் பெசென்ட்டின் வார்த்தைகளில் காணலாம்

ஏன் இந்த நடவடிக்கை?
 ஈரானிய இஸ்லாமியக் குடியரசைத் தாங்கிப் பிடிக்கும் எஞ்சியிருக்கும் அனைத்துப் பொருளாதார வாழ்வாதாரங்களையும் முற்றிலும் துண்டிப்பதற்கான முன்னெப்போதும் இல்லாத ஒரு நடவடிக்கை இது. அதிபர் ட்ரம்ப் மற்றும் அமெரிக்க ராணுவத்தின் பிரமாண்ட ஆற்றல் மூலம் ஈரானின் ராணுவத் திறன்களும் அணுசக்தித் திட்டங்களும் முடக்கப்பட்டுவிட்டன.

ஈரானுக்கு இரண்டே வழிகள்தாம்!
 ஈரான் இப்போது மிகத் தெளிவான ஒரு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அவர்களுக்கு முன்னால் இரண்டே வழிகள்தான் உள்ளன. ஒன்று, முற்றிலும் உலகளாவிய தனிமைப்படுத்தல் மற்றும் பிழைப்புக்கான பொருளாதாரம் அல்லது உலகப் பொருளாதாரத்துடன் மீண்டும் இணைவதற்கான வாய்ப்புடன் இயல்பு நிலைக்குத் திரும்பும் வழி.


Vikatan 13 minutes ago
Home Flash News