சென்னையில் 130 புதிய ஏசி மின்சார பேருந்துகள் சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்
சென்னை: சென்னையில் புதிதாக 130 தாழ்தள குளிர்சாதன மின்சாரப் பேருந்துகள் சேவையை முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்வில் கலந்துகொண்ட முதல்வர் விஜய், மொத்தம் 250 புதிய பேருந்துகளின் சேவைகளை கொடியசைத்து தொடக்கி வைத்தார். சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்காக ரூ. 134.50 கோடியில் வாங்கப்பட்ட 130 தாழ்தள குளிர்சாதன மின்சாரப் பேருந்துகளை முதல்வர் விஜய் கொடியசைத்து தொடக்கி வைத்த பின், பேருந்தில் ஏறி ஆய்வு செய்தார்.
130 புதிய ஏ.சி. மின்சார பேருந்துகள் ஆலந்தூர், பெரம்பூர், ஆவடி, சென்ட்ரல், பாடியநல்லூர், கேகே நகர், அய்யப்பன்தாங்கள் உள்ளிட்ட பணிமனைகளில் இருந்து இயக்கப்படுகிறது. இதேபோல், சேலம், விழுப்புரம், மதுரை, கோவை, நெல்லை ஆகிய மாவட்டங்களின் பயன்பாட்டிற்காக ரூ. 55.58 கோடியில் வாங்கப்பட்ட 120 புதிய சாதாரண பேருந்துகளின் சேவையையும் சேர்த்து மொத்தம் 250 புதிய பேருந்துகளின் சேவைகளை தொடக்கிவைக்கப்பட்டது.