Select Location
All Locations
State
Region
City / District
இந்தியாவில் ஜூலை 2026-ல் குறைந்த விமானப் பயணிகள் போக்குவரத்து..!

இந்தியாவில் ஜூலை 2026-ல் குறைந்த விமானப் பயணிகள் போக்குவரத்து..!

டெல்லி: இந்தியாவில் உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கையில் கணிசமாக சரிவு ஏற்பட்டுள்ளது. சமீபத்திய தகவலின்படி இந்தியாவில் ஜூலை மாதம் விமானங்களில் பயணித்தவர்கள் எண்ணிக்கை 4.5% சரிவடைந்து உள்ளது. 2025 ஜூலையில் 2.55 கோடி பேர் விமான பயணம் மேற்கொண்ட நிலையில் இவ்வாண்டு ஜூலையில் 2.43 கோடி பேர் மட்டுமே பயணம் செய்து உள்ளனர். சிவில் விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகம் (DGCA) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த ஆண்டு (2025) ஜூலையில் 1.26 கோடியாக இருந்த பயணிகளின் எண்ணிக்கை, இந்த ஆண்டு ஜூலையில் 1.20 கோடியாக சரிந்துள்ளது. இந்தியாவில் உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை கடந்த ஜூலையில் 4.74 சதவீதம் சரிவை பதிவு செய்துள்ளது. அதே போல வெளிநாட்டு பயணிகள் எண்ணிக்கை ஜூலை மாதத்தில் 4.59 சதவீதம் சரிந்து உள்ளது. நாட்டின் மற்ற நகரங்களில் பயணிகள் எண்ணிக்கை குறைந்தநிலையில், கடந்த ஜூலையில் டெல்லியில் மட்டும் விமான பயணிகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் 63.3 லட்சம் பேர் வெளிநாடுகளுக்கு விமானங்களில் பயணம் செய்துள்ளனர்.

 மேலும் மாநிலத்தின் தலைநகரான சென்னையில் ஜூலை மாதம் விமானங்களில் பயணித்தவர்கள் எண்ணிக்கை 14 சதவீதம் சரிந்துள்ளது. கடந்த மாதம் அதாவது 2026 ஜூலையில் 11,63,893 பேர் விமானங்களில் பயணம் செய்த நிலையில், சென்ற ஆண்டு அதாவது 2025 ஜூலையில் 13,54,143 பேர் பயணம் செய்து உள்ளனர். அதே போல 2026 ஆம் ஆண்டின் முதல் 7 மாதங்களில் (ஜனவரி-ஜூலை) மொத்த பயணிகளின் எண்ணிக்கை 984.03 லட்சத்தை எட்டியுள்ளது. இது 2025 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் (977.79 லட்சம்) ஒப்பிடும்போது 0.64% மட்டுமே அதிகமாகும்.


Dinakaran 2 hours ago
Home Flash News