தொடங்கிய 4 ஆண்டுகளிலேயே 2 மிக உயரிய விருதுகள்: பிஎம்இஜி சாதனை
சென்னை, செப்.9: தொடங்கிய 4 ஆண்டுகளிலேயே பிஎம்இஜி, மதிப்புமிக்க ‘இ4எம் இந்தியன் மார்க்கெட்டிங் அவார்ட்ஸ் சவுத் 2026’ விருது மேடையில் ‘ஏஜென்சி ஆப் தி இயர்’ மற்றும் ‘பெஸ்ட் ஸ்டார்ட்அப் ஆப் தி இயர்’ ஆகிய இருபெரும் மகுடங்களையும் ஒரே இரவில் சூடி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. ஒரே ஏஜென்சி, ஒரே இரவில் இந்த இரண்டு அரிய சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளது இதன் சிறப்பம்சமாகும்.
அதாவது டேட்டா, இன்சைட் இமேஜினேஷன் டெக்னாலஜி, கன்டென்ட் மற்றும் மீடியா ஆகியவை தனித்தனிப் பிரிவுகளாக இயங்காமல், ஒரு ஒருங்கிணைந்த குழுவாக ஒன்றிணைந்து செயல்படும் தத்துவமே சரியான தாரக மந்திரம் என்பதை இந்த வெற்றி உறுதிப்படுத்தியுள்ளது.
இது அவர்களின் முதல் பெரிய வெற்றி என்று சொல்லிவிட முடியாது. சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற மதிப்புமிக்க ‘ஏ.பி.பி.ஒய் விருதுகள் 2026’ நிகழ்விலும் பி.எம்.இ.ஜி ‘டிசைன் ஸ்பெஷலிஸ்ட் ஏஜென்சி ஆப் தி இயர்’ விருதைத் தட்டிச் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.