Select Location
All Locations
State
Region
City / District
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் – தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் – தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்!

நம் வெற்றி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நமது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளைத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக விரைவில் முன்னெடுப்போம் என்று விஜய் தெரிவித்துள்ளார்.. சுற்றுலா இடங்களை ஆராயுங்கள்

தமிழக வெற்றிக்கழகத் தலைவரும், முதலமைச்சருமான விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “வருகின்ற அக்டோபர் 6ம் தேதி நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகளை மேற்கொள்ள தேர்தல் பணிக்குழுவும், பணிகளைக் கண்காணிக்க தேர்தல் கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்படுகிறார்கள்.

தேர்தல் கண்காணிப்பாளர்கள்:
 அமைச்சர் N. ஆனந்த் 
அமைச்சர் K.A. செங்கோட்டையன்
 அமைச்சர் CTR நிர்மல் குமார்

தேர்தல் பணிக்குழு 35-மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதி. பொறுப்பாளர்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

துணைப் பொறுப்பாளர்கள்:
 பாலமுருகன் MLA, திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி
 சத்தியபாமா MLA, திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி
 ராம்குமார் MLA, பல்லடம் சட்டமன்றத் தொகுதி
 திலீப் MLA, நாமக்கல் சட்டமன்றத் தொகுதி
 சத்யா MLA, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி

அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட கழகத் தோழர்கள் அனைவரும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். வெற்றிச் சின்னமாம் விசில் சின்னம், மீண்டும் வாகை சூட வேண்டும். இடைத்தேர்தல் வரலாற்றிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர் என்கிற புதிய வரலாறு படைக்கும் வகையில் அனைவரும் தேர்தல் பணியாற்றிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இந்தத் தொகுதிகளில் நம் வெற்றி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நமது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளைத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக விரைவில் முன்னெடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.சு


News Tamil 24*7 1 hour ago
Home Flash News