வரும் 16ம் தேதி முதல் ஜனவரி 14ம் தேதி வரை நாடு முழுவதும் 233 மையங்களில் மார்கழி திருப்பாவை சொற்பொழிவு: திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தகவல்
திருமலை: ஆழ்வார் திவ்ய பிரபந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 233 மையங்களில் மார்கழி திருப்பாவை சொற்பொழிவு நடப்பதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூறியதாவது: திருப்பதி தேவஸ்தானத்தின் ஆழ்வார் திவ்ய பிரபந்த திட்டத்தின் கீழ் புனித மார்கழி மாதத்தை கொண்டாடும் வகையில், புகழ்பெற்ற சொற்பொழிவாளர்களை கொண்டு வரும் 16ம் தேதி முதல், 2026ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி வரை, நாடு முழுவதும் 233 மையங்களில் திருப்பாவை சொற்பொழிவு நிகழ்த்த உள்ளனர்.