12 புதிய கூடங்களுடன் விரிவு பெறும் வேலூர் கோட்டை அருங்காட்சியகம்!
வேலூர்: வேலூர் அரசு அருங்காட்சியகம் 2025-ம் ஆண்டில் 1.15 லட்சம் பார்வையாளர்களை கவர்ந்து ரூ.10.18 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளது.
வேலூர் கோட்டையில் தமிழக அரசின் அருங்காட்சியகம் உள்ளது. சுமார் 22 ஆயிரம் சதுரடி பரப்பளவு கொண்ட இடத்தில் 5 ஆயிரம் சதுரடியில் உள்ள கட்டிடத்தில் கற்சிற்ப கூடம், முந்து வரலாற்று கூடம், நாணய கூடம், ஓவியக்கூடம், விலங்கியல் கூடம், படிமங்கள் கூடம், மானுடவியல் கூடம், மாவட்ட தகவல் கூடம் என மொத்தம் 8 கூடங்களுடன் இயங்கி வருகின்றது.