பந்தளத்தில் இருந்து சபரிமலைக்கு திருவாபரண ஊர்வலம் 12-ந் தேதி புறப்படுகிறது
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பாண்டின் மகரவிளக்கு பூஜை வருகிற 14-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் சாமி ஐயப்பனுக்கு பாரம்பரிய வழக்கப்படி திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். அவ்வாறு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் பந்தளம் அரண்மனையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு இந்த திருவாபரணங்கள் பந்தளம் ராஜ குடும்ப மூத்த பிரதிநிதி தலைமையில் ஊர்வலமாக சன்னிதானத்திற்கு எடுத்து செல்வது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு திருவாபரணங்கள் வருகிற 12-ந் தேதி பந்தளம் அரண்மனையில் இருந்து வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலுக்கு எடுத்து செல்லப்படுகிறது. அன்றைய தினம் மதியம் சாஸ்தா கோவிலில் நடைபெறும் சிறப்பு பூஜைக்கு பிறகு திருவாபரணங்கள் 3 சந்தன பேழைகளில் சபரிமலை நோக்கி தலைச்சுமையாக ஊர்வலமாக புறப்படும்.