அந்நிய படையெடுப்பாளர்களால் அழிக்க முடியாத சோம்நாத் கோயில் வெற்றியின் வரலாறு: பிரதமர் மோடி பெருமிதம்
சோம்நாத்: குஜராத்திற்கு 3 நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி நேற்று வெராவல் நகரின் பிரபாஸ் படான் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற சோம்நாத் கோயிலுக்கு சென்றார். சோம்நாத் கோயில் மீது 1026ம் ஆண்டு முகலாய மன்னர் கஜினி முகமது முதல் முறையாக தாக்குதல் நடத்தினார்.
அதன் பின் பலமுறை இக்கோயில் அந்நிய படையெப்பாளர்களால் சேதப்படுத்தப்பட்டு புனரமைக்கப்பட்டது. இக்கோயில் முதல் முறையாக தாக்கப்பட்டு 1000 ஆண்டுகளுக்குப் பிறகும் நிலைத்து நிற்பதை கொண்டாடும் வகையில் சோம்நாத் சுயமரியாதை திருவிழா நடத்தப்பட்டது.
இதன் நிறைவு விழாவான நேற்று பிரதமர் மோடி சிறப்பு பூஜையில் பங்கேற்றார். மேலும், கோயில் தாக்கப்பட்ட போது அதை எதிர்த்து உயிர் தியாகம் செய்தவர்களை நினைவு கூறும் வகையில் சவுரியா யாத்திரையிலும் பிரதமர் மோடி பங்கேற்றார். இதில் 108 குதிரைகள் ஊர்வலத்தை மேளம் அடித்து மோடி தொடங்கி வைத்தார்.