புனித அயோத்தி நகரில் முஸ்லிம்கள் நுழைய தடை விதிக்க துறவிகள் கோரிக்கை
புதுடெல்லி: உத்தர பிரதேசத்தின் அயோத்தி யில் உள்ள ராமர் கோயிலைக் காண முஸ்லிம்களும் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் கருவறையில் நுழைய மட்டும் அனுமதிப்பதில்லை.
இச்சூழலில், ராமர் கோயிலில் கடந்த வாரம் வந்த ஒரு முஸ்லிம் இளைஞர், சால்வை விரித்து தொழுகை நடத்த முயற்சித்தார். உடனடியாக இதைப் பார்த்த பாதுகாப்பு போலீஸார் அந்த இளைஞரை தடுத்து நிறுத்தினர்.
போலீஸாரின் விசாரணைக்கு பிறகு அவர் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் அயோத்தியைச் சேர்ந்த துறவிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம்கள் அயோத்தியில் நுழையத் தடை விதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.