ஈரான் வான்வெளி மூடிட்டாங்க! ஏர் இந்தியா விமானம் இப்போ எப்படி போகுது தெரியுமா?
ஏர் இந்தியா மாற்றுப் பாதை
அமெரிக்காவின் தாக்குதல் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் சூழலில், ஈரான் தனது வான்வெளியை பகுதியளவில் மூடுவதாகஅறிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஈரான் தரப்பு விளக்கமளித்துள்ளது.
வான்வழியாக தற்போது அதிகாரபூர்வ அனுமதி பெற்ற விமானங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சர்வதேச விமான போக்குவரத்தில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த அறிவிப்பு வெளியான உடனேயே, ஏர் இந்தியா, இண்டிகோ உள்ளிட்ட விமானங்கள் ஈரான் வான்வெளியைத் தவிர்த்து மாற்றுப் பாதைகளில் சேவைகளை இயக்கத் தொடங்கின. சில விமானங்கள் நீண்ட சுற்றுப்பாதையில் செல்ல வேண்டியதால் பயண நேரம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.