I-PAC ரெய்டு வழக்கில் மம்தாவுக்கு பேரிடி..! சட்டத்தின் ஆட்சிக்கு மிகப்பெரிய அவமதிப்பு .. உச்ச நீதிமன்றம் காட்டம்..!
மம்தா பானர்ஜி சோதனையைத் தடுத்தார், ஆதாரங்களை அழித்தார், முக்கியமான ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்களை கைப்பற்றினார். மேலும் அமலாக்கத்துறை அதிகாரிகளை அச்சுறுத்தினார் என்று குற்றம்சாட்டப்பட்டது.
விசாரணையை பலவீனப்படுத்தவும், சோதனைக்குப் பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகளை அச்சுறுத்தவும், அவர்கள் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் விசாரணையின் போது ஒரு சலசலப்பை உருவாக்கி, வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் ஆளும் கட்சியின் ஆதரவாளர்களைத் தூண்டி வழக்கு வேண்டுமென்றே தாமதப்படுத்தப்பட்டதாக அமலாக்கத்டுறை குற்றம் சாட்டுகிறது