IND vs NZ 3-வது ஓடிஐ.. வேஸ்ட் லக்கேஜ்.. ஆல்ரவுண்டரை நீக்கிய பிசிசிஐ.. இந்திய அணி பிளேயிங் லெவன்!
இந்தியா, நியூசிலாந்து ஓடிஐ தொடர்
இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 284 ரன்கள் எடுத்தது.
கே.எல்.ராகுல் சூப்பர் சதம் (92 பந்துகளில் 11 பவுண்டரி, 1 சிக்சருடன் 112 ரன்கள்) விளாசினார்.
கேப்டன் சுப்மன் கில் அரை சதம் (56 ரன்கள்) அடித்தார். பின்பு பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 47.3 ஓவர்களில் 3 விக்கெட் மட்டுமே இழந்து 286 ரன்கள் எடுத்து வெற்றியை எட்டியது. நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் 17 பந்தில் 131 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருது வென்றார்.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடர் 1- 1 என்ற கணக்கில் சமனுக்கு வந்துள்ளது. இரு அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இந்தூரில் வரும் 18ம் தேதி இந்தூரில் நடைபெற உள்ளது. தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் போட்டி இது என்பதால் 3வது போட்டியில் இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.