செவ்வாயில் வீசிய சூறாவளி காற்று... மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்கலம் வெளியிட்ட அபூர்வ படங்கள்!
அக்டோபர் 16, 2024 அன்று எடுக்கப்பட்ட புதிய புகைப்படங்கள், செவ்வாய் கிரகம் வெறும் வறண்ட கோள் மட்டுமல்ல; அது காலங்காலமாக இயற்கைச் சக்திகளால் உருமாறி வரும் ஒரு 'சுறுசுறுப்பான உலகம்' என்பதை நிரூபித்துள்ளன.
செவ்வாய் கிரகத்தில் சூறாவளிகள் இல்லையென்றாலும், அங்கு வீசும் இடைவிடாத காற்று 'சாண்ட் பிளாஸ்டர்' (Sandblaster) கருவியைப் போல செயல்பட்டு, கிரகத்தின் மேற்பரப்பை பல மில்லியன் ஆண்டுகளாக செதுக்கி வருகிறது. காற்றினால் செதுக்கப்பட்ட நீண்ட முகடுகளை அறிவியலாளர்கள் 'யார்டங்ஸ்' (Yardangs) என்றழைக்கிறார்கள்.