'சென்னை சங்கமம் கலைவிழாவுடன் பொங்கல் கொண்டாடுவோம்'... மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை எழும்பூரிலுள்ள ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தொடக்கவிழாவில் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் பறை இசைத்து விழாவை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி, அமைச்சர்கள், மேயர் கலந்துகொண்டனர்.
பொங்கல் பண்டிகையின்போது கனிமொழி எம்.பி. ஏற்பாட்டில் ‘சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா' விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நடைபெற்று வருகிறது.