‘ஜனநாயகன்’ வெளியீட்டைப் பற்றி விஜய்யை விட முதல்வர் ஸ்டாலின் கவலைப்படுவது ஏன்? - பாஜக
தற்போது உச்ச நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றத்தை ஜனநாயகன் திரைப்பட குழு அணுகி தீர்வை பெற்றுக்கொள்ள வழிகாட்டுதலை வழங்கியுள்ளது. இதில் மத்திய அரசின் தலையீடும் இல்லை. பாஜக அரசியல் மற்றும் சென்சார் போர்டின் எந்தவித குறுக்கீடும் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.
எனவே ’ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப் போனதற்கான, காரணத்தின் உண்மையை உணர்ந்த நடிகர் விஜய், மிகப் பொறுமையாக அமைதியாக இருப்பது போல, தமிழக முதல்வரும் திமுகவின் கூட்டணி கட்சியினரும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் காட்டும் ஆர்வத்தை சற்று நிறுத்தி, தமிழக மக்களின் முக்கிய பிரச்சினைகளில் கவனம் செலுத்தும் படி பாஜக கேட்டுக்கொள்கிறது.