... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Sri.Balaji,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
கட்டு கட்டாக பணம் சிக்கிய விவகாரம்:

கட்டு கட்டாக பணம் சிக்கிய விவகாரம்: பதவி நீக்கத்திற்கு எதிராக நீதிபதி யஷ்வந்த் வர்மா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!!

புதுடெல்லி: தன்னை பதவி நீக்கம் செய்ய மக்களவை சபாநாயகர் 3 பேர் குழுவை அமைத்ததை எதிர்த்து நீதிபதி யஷ்வந்த் வர்மா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. டெல்லி உயர்​நீ​தி​மன்ற நீதிப​தி​யாக பணி​யாற்​றிய யஷ்வந்த் வர்மா வீட்​டில் கடந்​தாண்டு ஏற்​பட்ட தீ விபத்​தில் எரிந்த நிலை​யில் பண மூட்​டைகள் கைப்​பற்​றப்​பட்​டன. இந்த விவகாரத்தில் தனது பதவியை ராஜினாமா செய்ய நீதிபதி யஷ்வந்த் மறுத்துவிட்டார்.

 இதையடுத்து, கடந்தாண்டு நடைபெற்ற மழைக்கால கூட்டத் தொடரின் போது சபாநாயகர் ஓம் பிர்லாவிடம், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்யக்கோரி 146 மக்களவை உறுப்பினர்கள் கையெழுத்திட்டு கடிதம் வழங்கினர்.
இந்த கடிதத்தை ஏற்றுக்கொண்ட மக்களவை சபாநாயகர் யஸ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க மூன்று பேர் கொண்ட விசாரணை குழுவை கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அமைத்தார். இதே தீர்​மானம் மாநிலங்களவை​யில் நிராகரிக்​கப்​பட்​டது. இந்நிலையில், சபா​நாயகரின் நடவடிக்​கையை எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில் நீதிபதி யஸ்​வந்த் வர்மா மனுத்​ தாக்​கல் செய்​தார். 

அதில் விசா​ரணைக்கு குழு அமைத்​தது அரசி​யல்​ சாசனம் மற்​றும் நீதிப​தி​கள் விசா​ரணை சட்​டத்​துக்கு எதி​ரானது என கூறி சபா​நாயகரின் நடவடிக்​கையை ரத்து செய்​யும்​படி நீதிபதி வர்மா கூறியிருந்​தார். இந்த மனு மீதான விசா​ரணை நீதிப​தி​கள் திபாங்​கர் தத்தா மற்றும் எஸ்​சி.சர்மா ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நடைபெற்ற வந்தது. இந்த நிலையில், தன்னை பதவி நீக்கம் செய்ய மக்களவை சபாநாயகர் 3 பேர் குழுவை அமைத்ததை எதிர்த்து நீதிபதி யஷ்வந்த் வர்மா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

Source : Dinakaran

8 hours ago

Home Flash News