... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
“அதிமுகவை ஒரு குறிப்பிட்ட சமுதாய கட்சியாக மாற்றிவிட்டார் பழனிசாமி”

“அதிமுகவை ஒரு குறிப்பிட்ட சமுதாய கட்சியாக மாற்றிவிட்டார் பழனிசாமி” - ஓபிஎஸ் விமர்சனம்

தென்காசி: “நன்றி மறந்தவர்களுக்கு எந்தக் காலத்திலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். உண்மையாக உழைத்த தொண்டர்களுக்கும் துரோகம் செய்தார். தனது சுயநலனை மட்டுமே நினைப்பவர் ஓர் இயக்கத்தின் தலைவராக இருக்க முடியாது. அதிமுகவை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் கட்சியாக மாற்றிவிட்டார்” என எடப்பாடி பழனிசாமியை ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சித்துள்ளார். தென்காசி மாவட்டம், இலஞ்சியில் திமுக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் தலைமை வகித்தார்.

 இந்த நிகழ்வில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியது: “யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம், யார் வேண்டுமானாலும் கட்சியை அபகரித்தக்கொண்டு நாடகமாடலாம். ஆனால், நிலையாக நின்று, எந்த நோக்கத்துக்காக இந்த இயக்கம் உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்துக்காக நிலையாக நின்று, சரித்திர சாதனையை நிகழ்த்தியவர் மு.க.ஸ்டாலின். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்காக பார்த்துப் பார்த்து நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்தத் திட்டங்களின் முழு பயன்களையும் மக்களுக்கு நேரடியாக கிடைக்கச் செய்கிறார். 

முன்பு இருந்த அரசுகள் திட்டங்களை அறிவித்துவிடுவார்கள். ஆனால் அந்த திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்று ஆய்வு செய்வதில்லை. ஆனால், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக ஆட்சியின் பலன்கள் நேரடியாக மக்களுக்கு கிடைக்கச் செய்கிறார். தாய்மார்களுக்கு 5 ஆயிரம் ரூபாயை அவர்களுக்கு தெரியாமலேயே வங்கி கணக்கில் செலுத்தினார். செய்தி வந்த பின்னர்தான் 5 ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வந்ததை மக்கள் அறிந்துகொண்டார்கள். அந்த அளவுக்கு சாதனைகளை செய்து, திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

Source : Hindu Tamil

1 hour ago

Home Flash News