1.35 மெட்ரிக் டன் கச்சா எண்ணெயுடன் இந்தியா வந்த கப்பல்.! ஹார்மூஸ் ஜலசந்தியை கடந்தது எப்படி? திக்திக் நிமிடங்கள்.!
shenlong suezmax : ஈரான் ஹார்மூஸ் ஜலசந்தியை வெற்றிகரமாக கடந்து கப்பல் ஒன்று, கச்சா எண்ணையுடன் இந்தியா வந்தடைந்துள்ளது. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். மத்திய கிழக்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகள் ஈரான் மீது போரைத் தொடங்கி இருக்கின்றன. இதனால் ஈரான் தனது ஹார்மூஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்துள்ளது.
ஹார்மூஸ் ஜலசந்தி என்பது ஒரு கடல் வழி பாதையாகும். உலகளவில் நடக்கும் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் 20% வரை இந்த ஜலசந்தி வழியாக நடக்கிறது. சவுதி அரேபியா, கத்தார், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், ஈராக் கொண்ட மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இந்த ஹார்மூஸ் ஜலசந்தி வழியாகத்தான் கச்சா எண்ணெய் கொண்டுவரப்படுகிறது.
இந்த ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால் இந்த நாடுகளில் இருந்து இந்தியா, சீனா, பாகிஸ்தான், வங்காளதேசம் போன்ற அண்டை நாடுகளுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. மேலும் ஹார்மூஸ் ஜலசந்தியில் பயணிக்கும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக நம் நாட்டிற்கு வரவேண்டிய கப்பல்கள் வந்து சேரவில்லை. கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக இந்தியாவில் எரிவாயு சிலிண்டர்கள், பெட்ரோல், டீசல் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.