Select Location
All Locations
State
Region
City / District
வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க முதல்வர் விஜய் நாளை திருச்சி வருகை

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க முதல்வர் விஜய் நாளை திருச்சி வருகை

திருச்சி: ​திருச்சி கிழக்கு தொகுதி வாக்​காளர்​களுக்கு நன்றி தெரி​விப்​ப​தற்​காக, தவெக தலை​வரும், முதல்​வரு​மான விஜய் நாளை (ஜூன் 1) திருச்சி வரு​கிறார். தனியார் கல்​லூரி வளாகத்​தில் நடை​பெறும் நன்றி அறி​விப்பு பொதுக்​கூட்​டத்​தில் பங்​கேற்​றுப் பேசுகிறார்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தவெக தலை​வர் விஜய் சென்னை பெரம்​பூர் மற்​றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகு​தி​களில் போட்​டி​யிட்​டு, வெற்றி பெற்​றார். இதையடுத்து அவர், பெரம்​பூர் தொகு​தியை வைத்​துக் கொண்​டு, திருச்சி கிழக்​குத் தொகுதி எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​தார். இந்​நிலை​யில், திருச்சி கிழக்கு தொகுதி மக்​களுக்கு நன்றி தெரி​விப்​ப​தற்​காக முதல்​வர் விஜய் நாளை (ஜூன் 1) திருச்சி வரு​கிறார்.

இதுகுறித்து தவெக டெல்டா மண்டல பொறுப்​பாள​ரும், தமிழ்​நாடு நகர்ப்​புற வாழ்​விட மேம்​பாட்டு வாரிய தலை​வரு​மான கு.ப.கிருஷ்ணன் திருச்​சி​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறியது: தவெக தலை​வர் விஜய், தமிழக முதல்​வ​ராக பொறுப்​பேற்ற பின்​னர் முதல் முறை​யாக திருச்சி வருகை தரு​கிறார்.

இதற்​காக சென்​னையி​லிருந்து தனி விமானத்​தில் திருச்சி விமான நிலை​யம் வரும் முதல்​வர், அங்​கிருந்து டிவிஎஸ் டோல்​கேட், பழைய பால்​பண்​ணை, சஞ்​சீவி நகர், சத்​திரம் பேருந்து நிலை​யம் வழி​யாக தனியார் கல்லூரி வளாகத்துக்கு வரு​கிறார். பின்​னர், அங்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்ள இடத்​தில் மாலை 4 மணி​யள​வில் பொது​மக்​கள் மத்​தி​யில் நன்றி தெரி​வித்​துப் பேசுகிறார். இந்த நிகழ்​வைத் தொடர்ந்து தமிழகத்​தின் மற்ற மாவட்​டங்​களுக்​கும் சுற்​றுப்​பயணம் செல்ல இருக்​கிறார். முதல்​வர் விமான நிலை​யத்​திலிருந்து விழா நடை​பெறும் இடத்​துக்கு வாக​னத்​தில் வரும்​போது, அவரது வாக​னத்தை யாரும் பின் தொடர வேண்​டாம். இவ்​வாறு அவர் கூறி​னார்.

அப்​போது, பேரவைத் துணைத்தலைவர் எம்​.ர​விசங்​கர் உடன் இருந்​தார். திருச்சி வரும் முதல்​வர் விஜய்​க்கு, திருச்சி விமான நிலை​யத்​திலிருந்து கூட்டம் நடைபெறும் இடம்வரை சாலை​யின் இரு​புறங்​களி​லும் வரவேற்பு அளிக்க தவெக​வினர் ஏற்​பாடு செய்து வரு​கின்​றனர்.


Hindu Tamil 18 hours ago
Home Flash News