Select Location
All Locations
State
Region
City / District
காதலரை அறிமுகப்படுத்திய நடிகை பிரிகிடா!

காதலரை அறிமுகப்படுத்திய நடிகை பிரிகிடா!

நடிகை பிரிகிடா சாகா தன் காதலரைப் பிறந்த நாளில் அறிமுகம் செய்துள்ளார். ஆஹா கல்யாணம் என்கிற இணையத் தொடரில் பவி டீச்சராக நடித்து பிரபலமான நடிகை பிரிகிடா சாகா தொடர்ந்து அயோக்யா, மாஸ்டர் ஆகிய படங்களின் மூலம் வரவேற்பைப் பெற்றார். மேலும், இயக்குநர் பார்த்திபனின் உதவி இயக்குநராக இரவின் நிழல் படத்தில் பணியாற்றியதுடன் நடிக்கவும் செய்தார்.

இறுதியாக, மார்கன், இட்லி கடை ஆகிய படங்களில் நடித்திருந்தார். குணச்சித்திர கதாபாத்திரம், நாயகியின் தோழி ஆகிய ரோல்களில் நடித்தும் வருகிறார்.

இந்த நிலையில், பிரிகிடா சாகா நடிகர் ஆனந்த் என்பவரைக் காதலிப்பதாக அறிவித்துள்ளார். மீசைய முருக்கு, நண்பன் ஒருவன் வந்த பிறகு ஆகிய படங்களில் நடித்து கவனம் பெற்றவர் ஆனந்த். இவரும் பிரிகிடாவும் சில ஆண்டுகளாகக் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. தற்போது, நடிகர் ஆனந்த்தின் பிறந்த நாளில், “சினிமா எனக்கு கனவுகளைக் கொடுத்தது. வாழ்க்கை உன்னைக் கொடுத்தது. என் என்றைக்குமானவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்” எனக் கூறி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


Dinamani 1 hour ago
Home Flash News