Select Location
All Locations
State
Region
City / District
கூட்டுறவு பயிர் கடன்களை தள்ளுபடி

கூட்டுறவு பயிர் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி சென்னையில் 20-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் பேரணி

சென்னை: கூட்​டுறவு பயிர் கடன்​களை தள்​ளு​படி செய்​யக்​கோரி சென்​னை​யில் விவ​சா​யிகள் பேரணி நடத்​தினர். தவெக தனது தேர்​தல் அறிக்​கை​யில் அளித்த வாக்​குறு​தி​யின்​படி, கூட்​டுறவு பயிர் கடன்​களை உடனடி​யாக தள்​ளு​படி செய்ய வலி​யுறுத்​தி, தமிழக விவ​சா​யிகள் பாது​காப்பு சங்​கம் மற்​றும் விவ​சாய சங்​கங்​களின் கூட்​டமைப்பு சார்​பில் சென்​னை​யில் நேற்று பேரணி நடை​பெற்​றது.

எழும்​பூர் சித்ரா திரையரங்​கம் முதல் எல்​.ஜி. சாலை சந்​திப்பு வரை நடை​பெற்ற இந்​தப் பேரணிக்​கு, சங்​கத்​தின் நிறு​வனர் ஈசன் முரு​க​ சாமி தலைமை தாங்​கி​னார். பொதுச் செய​லா​ளர் சண்​முகசுந்​தரம், மாநிலத் தலை​வர் முத்து விஸ்​வ​நாதன் ஆகியோர் முன்​னிலை வகித்​தனர்.

தமிழகம் முழு​வ​தி​லும் இருந்து 20-க்​கும் மேற்​பட்ட விவ​சாய சங்​கங்​களைச் சேர்ந்த திரளான விவ​சா​யிகள் இதில் கலந்​து​கொண்​டு, அரசுக்கு எதி​ராக முழக்​கங்​களை எழுப்​பினர்.

விவசாயிகளுக்கு ஏமாற்றம் அப்​போது செய்​தி​யாளர்களிடம் ஈசன் முரு​க​சாமி கூறியதாவது: தவெக ஆட்​சிக்கு வந்​தால் 5 ஏக்​கர் வரை நிலம் வைத்​துள்ள விவ​சா​யிகளுக்கு முழு​மை​யாக கடன் தள்​ளு​படி செய்​யப்​படும் என அக்​கட்​சி​யின் தலை​வர் உறு​தி​யளித்​தார்.

ரூ.50 ஆயிரம், ரூ.75 ஆயிரம் என விவ​சா​யிகளை ஏலம் விட்டு வரு​கிறார். பயிருக்கு உரிய விலை கிடைக்​காமலும், கடன் சுமை​யாலும் தமிழகத்​தில் நாள்​தோறும் 2 விவ​சா​யிகள் தற்​கொலை செய்​து​கொள்​வ​தாக அரசு புள்​ளி​விவரங்​களே தெரிவிக்​கின்​றன.

மாநிலம் தழுவிய போராட்டம் விவ​சா​யிகளை மிரட்​டும் போக்கை அதி​காரி​கள் கைவிட வேண்​டும். உடனடி​யாக பயிர் கடன்​களை ரத்து செய்​யா​விட்​டால், அடுத்​தகட்​ட​மாக மாநிலம் தழு​விய போ​ராட்​டங்​கள் முன்​னெடுக்​கப்​படும்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.


Hindu Tamil 2 hours ago
Home Flash News