பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்: கே.சி.வீரமணி உள்பட 2 எம்எல்ஏ.க்கள் பங்கேற்கவில்லை
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் தனித்தனியாக நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளரும், ஆற்காடு தொகுதி எம்எல்ஏவு.மான எஸ்.எம்.சுகுமார் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட முன்னாள் செயலாளரும், முன்னாள் அமைச்சரும் ஜோலார்பேட்டை தொகுதி எம்எல்ஏ.வுமான கே.சி. வீரமணி ஆகியோர் பங்கேற்கவில்லை.
முன்னதாக, தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் சுகுமாரிடம் இருந்த ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டு, சுமைதாங்கி ஏழுமலைக்கு வழங்கப்பட்டது.
இதேபோல் கே.சி.வீரமணியிடமிருந்தும் திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் பொறுப்பு பறிக்கப்பட்டு, டாக்டர் பசுபதியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே, இவர்களைச் சமாதானப்படுத்தும் நோக்கில் கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக சுகுமாரும், அமைப்புச் செயலாளராக வீரமணியும் நியமிக்கப்பட்டனர்
எனவே, நிர்வாக வசதிக்காகத் திருப்பத்தூர் மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும்’ என அவர்கள் வலியுறுத்தியதாகத் தெரிகிறது. அப்போது பழனிசாமி ‘உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ எனக்கூறி அவர்களை சமாதானம் செய்ததாகத் தெரிகிறது.