கம்பீர் நீக்கம்.. புதிய பயிற்சியாளரை நியமித்த பிசிசிஐ? யார்னு பாருங்க!
தொடர் தோல்விகளால் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மீது பிசிசிஐ அதிருப்தியில் உள்ளதால், வரவிருக்கும் ஜிம்பாப்வே டி20 தொடருக்கான இடைக்கால பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மணன் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய டி20 அணி அயர்லாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தோற்றதை அடுத்து இங்கிலாந்துக்கு எதிராக விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இத்தொடரை வெல்லும் வாய்ப்பை இந்திய அணி இழந்துள்ளது. இந்த செயல்பாடு பிசிசிஐ-க்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக கவுதம் கம்பீரின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என பிசிசிஐ சில அதிரடியான முடிவுகளை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.