Select Location
All Locations
State
Region
City / District
சிரியா முன்னாள் அதிபர் ஆசாத்துக்கு மரண தண்டனை

சிரியா முன்னாள் அதிபர் ஆசாத்துக்கு மரண தண்டனை

டமாஸ்கஸ்: சிரியா முன்​னாள் அதிபர் ஆசாத்​துக்கு அந்த நாட்டு நீதி​மன்​றம் நேற்று மரண தண்​டனை விதித்​தது. மேற்கு ஆசிய நாடான சிரி​யா​வின் மக்​கள் தொகை​யில் 74 சதவீதம் பேர் சன்னி முஸ்​லிம்​கள். 13 சதவீதம் பேர் ஷியா முஸ்லிம்​கள். கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை சிரி​யா​வின் அதிப​ராக பஷார் அல் ஆசாத் பதவி வகித்​தார். ஷியா முஸ்​லிம் பிரிவைச் சேர்ந்த அவருக்கு எதி​ராக கடந்த 2024-ம் ஆண்டு டிசம்​பரில் சன்னி கிளர்ச்​சிப் படைகள் போராட்டம் நடத்தி் ஆட்​சி​யைக் கைப்​பற்​றின. 

அதிபர் ஆசாத் குடும்​பத்​துடன் ரஷ்​யா​வுக்கு தப்​பியோடி​விட்​டார். சிரி​யா​வின் உள்​நாட்​டுப் போர் குறித்து சிறப்பு நீதி​மன்​றம் விசாரணை நடத்தி நேற்று தீர்ப்பு வழங்​கியது. தீர்ப்​பில் கூறியிருப்ப​தாவது: முன்​னாள் அதிபர் ஆசாத் தனது ஆட்​சிக் காலத்​தில் அப்​பாவி​கள் பலரை கொன்று குவித்​துள்​ளார். 15 வயதுக்கு உட்​பட்ட சிறாரும் கொடூர​மாக கொலை செய்​யப்​பட்டு உள்​ளனர்.

ஆசாத் மீதான குற்​றச்​சாட்​டு​கள் ஆதா​ரங்​களு​டன் உறுதி செய்​யப்​பட்டு இருப்​ப​தால் அவருக்கு மரண தண்​டனை விதிக்​கப்​படு​கிறது. அவரது தம்பி மெஹர் அல் ஆசாத், ராணுவ மூத்த தளபதி அதெப் நஜிப் உட்பட 7 முன்​னாள் அதி​காரி​களுக்​கும் மரண தண்​டனை விதிக்​கப்​படு​கிறது. இவ்​வாறு தீர்ப்​பில் தெரிவிக்​கப்​பட்டு உள்​ளது. முன்​னாள் ராணுவ மூத்த தளபதி அதெப் நஜிப் மட்​டுமே சிரியா தலைநகர் டமாஸ்​கஸில் சிறை​யில் அடைக்​கப்​பட்டு உள்​ளார். மற்ற 8 பேரும் ரஷ்​யா​வில் தஞ்​சமடைந்து உள்​ளனர். எனவே அதேப் நஜிபுக்​கு மட்​டும்​ விரை​வில்​ மரண தண்​டனை நிறைவேற்றப்​படும்​ என்​று சிரி​யா அரசு வட்​​டாரங்​கள்​ தெரிவித்துள்​ளன.


Hindu Tamil 2 hours ago
Home Flash News