Select Location
All Locations
State
Region
City / District
துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’ ரிலீஸ் செப்.3-க்கு தள்ளிவைப்பு

துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’ ரிலீஸ் செப்.3-க்கு தள்ளிவைப்பு

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஐ அம் கேம்’ படம் செப்டம்பர் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வேஃபரர் பிலிம்ஸ் அதன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஆட்டம் பெரியதாக இருக்கும்போது வெளியீடும் பெரிய அளவில் இருக்க வேண்டும். உங்களின் எதிர்பார்ப்பு எங்களுக்கு புரிகிறது. தாமதத்துக்காக மன்னிப்பு கேட்கிறோம். ‘ஐ அம் கேம்’ படம் ஆகஸ்ட் 20-ம் தேதிக்கு பதிலாக, செப்டம்பர் 3-ம் தேதியில் வெளியாகும்.

புதிய தேதியில் வெளியாக இருக்கும் படம் அதிகமான, திரையரங்குகளில் வெளியாகும். கொஞ்சம் கூடுதல் நாள் காத்திருக்க வேண்டும்தான் என்றாலும் விளையாட்டு பெரிய அளவில் இருக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஐ அம் கேம்’ படத்தை ‘ஆர்டிஎக்ஸ்’ நஹாஸ் ஹிதாயத் இயக்​கி​யுள்​ளார். இதில் கயாது லோஹர், ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், சம்​யுக்தா விஸ்​வ​நாதன் உள்​ளிட்ட பலர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர். அதிரடி த்ரில்லர் படமான இதற்கு ஜிம்ஷி காலித் ஒளிப்​ப​திவு செய்கிறார். ஜேக்ஸ் பிஜாய் இசை அமைக்​கிறார்.

துல்​கர் சல்​மானின் 40-வது திரைப்​பட​மான இதை, அவருடைய வேஃபரர் பிலிம்ஸ் மெகா பட்​ஜெட்​டில் தயாரித்துள்ளது. ஓணம் பண்​டிகையை முன்​னிட்டு ஆகஸ்ட் 20-ல் வெளி​யாகும் என்று அறிவிக்​கப்பட்ட படத்தின் வெளியீடு தற்போது அடுத்த மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


Hindu Tamil 57 minutes ago
Home Flash News