Select Location
All Locations
State
Region
City / District
“நானும் சூர்யா ரசிகன் தான்” – இயக்குநர் வெங்கி அட்லுரி உற்சாகம்

“நானும் சூர்யா ரசிகன் தான்” – இயக்குநர் வெங்கி அட்லுரி உற்சாகம்

நானும் சூர்யாவின் ரசிகன் தான் என்று ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இயக்குநர் வெங்கி அட்லுரி தெரிவித்துள்ளார்.

வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படம் இன்று வெளியாகி உள்ளது. ‘கருப்பு’ வெற்றியைத் தொடர்ந்து சூர்யா இந்த படத்தில் நடித்திருக்கிறார். படத்தின் இயக்குநர் வெங்கி அட்லுரி, சென்னை ரோகினி திரையரங்கில் ரசிகர்களுடன் சேர்ந்து ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படம் பார்த்தார்.

படம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய வெங்கி அட்லுரி, ‘மிகவும் திருப்தியாக உணர்கிறேன். ரசிகர்கள் படத்தை உற்சாகத்துடன் ரசிக்கிறார்கள். நானும் சூர்யாவின் ரசிகன் தான். ஒரு ரசிகனாகதான் இப்போதும் படம் பார்த்து ரசித்தேன். எல்லோரும் படத்தினை மகிழ்ச்சியுடன் ரசிப்பது மனமகிழ்வை தருகிறது.

சூர்யாவுடன் முதல் முறையாக இணைந்து பணியாற்றி இருக்கிறேன். ஒரு ரசிகனாக அவரின் அனைத்து குணங்களும் பிடிக்கும். குடும்பத்துடன் வந்து படத்தை பாருங்கள்’ என்று தெரிவித்தார்.

தமிழ், தெலுங்கில் வெளியாகி இருக்கும் விஸ்வநாத் & சன்ஸ் படத்தில் சூர்யாவுடன் மமிதா பைஜு, ராதிகா சரத்​கு​மார், ரவீனா டாண்​டன் உள்​ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு நிமிஷ் ரவி ஒளிப்​ப​திவு செய்​துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.


Hindu Tamil 1 hour ago
Home Flash News