Select Location
All Locations
State
Region
City / District
LIVE
ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்கதேச அணி வரலாற்று வெற்றி!

ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்கதேச அணி வரலாற்று வெற்றி!

டார்வின்: ஆஸ்திரேலியாவுக்கு எதி​ரான முதலா​வது கிரிக்​கெட் டெஸ்ட் போட்​டி​யில் வங்​கதேச அணி 9 விக்​கெட் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. இதன்​மூலம் ஆஸ்​திரேலி​யாவை அதன் சொந்த மண்​ணில் வீழ்த்தி வரலாற்று வெற்​றியை வங்​கதேச அணி பதிவு செய்​துள்​ளது. 2 போட்​டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளை​யாடு​வதற்​காக வங்​கதேச அணி ஆஸ்​திரேலி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து வரு​கிறது. 

இவ்​விரு அணி​களுக்கு இடையி​லான முதலா​வது டெஸ்ட் போட்டி கடந்த 13-ம் தேதி டார்​வினிலுள்ள மராரா மைதானத்​தில் தொடங்​கியது. ஆஸ்​திரேலியா முதல் இன்​னிங்​ஸில் 198 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. ஸ்டீவன் ஸ்மித் 71 ரன்​கள் எடுத்​தார். வங்​கதேச வீரர் ஹசன் மஹ்மூத் அபார​மாக பந்​து​வீசி 6 விக்​கெட்​களைச் சாய்த்​தார்.

இதையடுத்து முதல் இன்​னிங்ஸை விளை​யாடிய வங்​கதேச அணி 138 ஓவர்​களில் 426 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தது. தன்​ஸித் ஹசன் தமீம் 101 ரன்​களும், கேப்​டன் நஜ்​முல் ஹொசைன் ஷான்டோ 84 ரன்​களும், மெஹிதி ஹசன் மிராஸ் 65 ரன்களும் சேர்த்​தனர். இதைத் தொடர்ந்து முதல் இன்​னிங்​ஸில் வங்​கதேசம் 228 ரன்​கள் முன்​னிலை பெற்​றது.

இதன் பின்​னர் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய ஆஸ்​திரேலிய அணி 3-ம் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 53 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 161 ரன்​கள் எடுத்​திருந்​தது. இந்​நிலை​யில் நேற்​றைய 4-ம் நாள் ஆட்​டத்தை கேமரூன் கிரீன் 43 ரன்​களு​ட​னும், அலெக்ஸ் கேரி 19 ரன்​களு​ட​னும் தொடங்​கினர். அலெக்ஸ் கேரி 30 ரன்​கள் சேர்த்த நிலை​யில் ஆட்​ட​மிழந்​தார். பியூ வெப்​ஸ்​டர் 5, பாட் கம்​மின்ஸ் 8, மிட்​செல் ஸ்டார்க் 18, நேதன் லயன் 15 ரன்​கள் சேர்த்​தனர்.

ஒரு​முனை​யில் விக்​கெட்​கள் விழுந்​தா​லும் கேமரூன் கிரீன் நிலைத்து நின்று விளை​யாடி சதமடித்​தார். அவர் 201 பந்​துகளில் 104 ரன்​கள் (4 பவுண்​டரி, ஒரு சிக்​ஸர்) எடுத்து ஆட்​ட​மிழந்​தார். மெஹிதி ஹசன் மிராஸ், ஹசன் மஹ்மூத் ஆகியோரின் அபார பந்​து​வீச்சு காரண​மாக ஆஸ்​திரேலிய அணி, 2-ம் இன்​னிங்​ஸில் 284 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. 2-வது இன்​னிங்​ஸின்​போது மெஹிதி ஹசன் 5 விக்​கெட்​களை​யும், ஹசன் மஹ்மூத் 3 விக்​கெட்​களை​யும், தஸ்​கின் அகமது, தைஜுல் இஸ்​லாம் ஆகியோர் தலா ஒரு விக்​கெட்​டை​யும் கைப்​பற்​றினர்.


Hindu Tamil 1 hour ago
Home Flash News