Select Location
All Locations
State
Region
City / District
தேசிய கட்சிகள் Vs மாநிலக் கட்சிகள்: தரவுகள் சொல்லும் ‘முக்கியத்துவ’ நிலவரம்

தேசிய கட்சிகள் Vs மாநிலக் கட்சிகள்: தரவுகள் சொல்லும் ‘முக்கியத்துவ’ நிலவரம்

இந்திய அரசியல் என்பது ஒரே வண்ணத்தால் தீட்டப்பட்ட ஓவியம் அல்ல; அது பல்வேறு மாநில அடையாளங்கள், மொழிகள், பண்பாடுகளின் அழகிய கலவையான நவீன ஓவியம்.

சமீப ஆண்டுகளில் இந்திய அரசியலில் நிகழும் மாற்றங்கள், மாநிலக் கட்சிகளின் எதிர்காலம் குறித்தும், அவை தங்கள் முக்கியத்துவத்தை இழந்து வருகின்றனவா என்பது குறித்தும் பலமான விவாதங்களைக் கிளப்பியுள்ளன.

மாநிலக் கட்சிகள் எதிர்கொள்ளும் சவால்கள் தேசியக் கட்சிகளின் தீவிர விரிவாக்கம், நிதி மற்றும் தொழில்நுட்ப வளங்களில் ஏற்படும் இடைவெளி, உட்கட்சிப் பூசல்கள், கட்சித் தாவல் அலைகள் மற்றும் மாறிவரும் புதிய தலைமுறை வாக்காளர்களின் மனநிலை ஆகியவை மாநிலக் கட்சிகளுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.

சமீப காலங்களில் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்த பல மாநிலங்களில் உட்கட்சிப் பூசல்களும் கட்சித் தாவல்களும் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக, மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ், மகாராஷ்டிராவில் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ், டெல்லியில் ஆம் ஆத்மி போன்ற கட்சிகளில் நடந்த பிளவுகளும், கட்சித் தாவல்களும் மாநிலக் கட்சிகளின் அமைப்பு ரீதியான பலவீனங்களை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. இருப்பினும், இத்தகைய அமைப்பு ரீதியான பின்னடைவுகள் மட்டுமே ஒரு கட்சியின் மக்கள் ஆதரவுத் தளம் சுருங்கிவிட்டதாகக் கூறிவிட முடியாது.

ஆட்சி அதிகாரமும் வாக்கு வங்கியும்
 தற்போது பாஜக 11 மாநிலங்களிலும், காங்கிரஸ் 3 மாநிலங்களிலும் ஆட்சி செய்கின்றன. மாநிலக் கட்சிகள் தனித்து 4 மாநிலங்களிலும், கூட்டணியாக 10 மாநிலங்களிலும் ஆட்சியில் உள்ளன. 2015 - 2020 காலக்கட்டத்தில் 9 மாநிலங்களில் தனித்து ஆட்சியில் இருந்த மாநிலக் கட்சிகளின் எண்ணிக்கை தற்போது குறைந்திருந்தாலும், அவற்றுக்கான வாக்கு வங்கி சரிவைச் சந்திக்கவில்லை.


Hindu Tamil 1 hour ago
Home Flash News