Select Location
All Locations
State
Region
City / District
ட்ரம்ப் தனது சொந்த பாதுகாப்பில் கவனம் செலுத்தவும்: ஈரான் எம்பி இப்ராஹிம் அசிசி அறிவுரை

ட்ரம்ப் தனது சொந்த பாதுகாப்பில் கவனம் செலுத்தவும்: ஈரான் எம்பி இப்ராஹிம் அசிசி அறிவுரை

டெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தி தொடர்​பாக வீணான சவால்களை விடுப்​ப​தற்கு பதிலாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது சொந்த பாது​காப்​பில் கவனம் செலுத்த வேண்​டும் என்று ஈரான் எம்பி இப்​ராஹிம் அசிசி அறி​வுரை வழங்கி​ உள்​ளார்.

சமீபத்​தில் நியூ​யார்க்​கில் நடை​பெற்ற கூட்​டத்​தில் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், போரில் ஈரானை வீழ்த்​திய பிறகு உலகள​வில் கச்சா எண்​ணெய் மற்​றும் இயற்கை எரி​வாயு போக்​கு​வரத்​துக்கு மிக​வும் முக்​கிய​மாக விளங்​கும் ஹார்​முஸ் ஜலசந்தியை அமெரிக்​கா​வின் பிராந்​தி​யப் பகு​தி​யாக அறி​விப்​பேன் என்று பேசி​னார். அமெரிக்​க கடற்​படை அப்​பகு​தி​யில் முழு முற்​றுகையை ஏற்​படுத்​தி​யுள்​ள​தாக​வும் அவர் கருத்து தெரிவித்திருந்​தார்

ட்ரம்​பின் இந்த சர்ச்​சைக்​குரிய பேச்​சுக்கு ஈரானிய நாடாளுமன்றத்​தின் தேசிய பாது​காப்பு மற்​றும் வெளி​யுறவுக் கொள்​கைக் குழு​வின் தலை​வ​ரான இப்​ராஹிம் அசிசி எக்ஸ் தளத்தில் பதிலளித்​துள்​ளார். அதில், “ஹார்​முஸ் ஜலசந்தி குறித்து ஓயாமல் வீண் சவால்​களை விடுப்​பதை விட்​டு​விட்​டு, மீண்​டும் உணவுப்​பொருள் வாக​னத்​தில் ஒளிந்​து​கொள்​ளும் நிலைமை வராமல் ட்ரம்ப் தனது சொந்​தப் பாது​காப்​பில் கவனம் செலுத்​து​வது அவருக்கு நல்​லது” என்று தெரி​வித்​துள்​ளார்.

கடந்த ஜூலை மாதம் துருக்​கி​யில் நடை​பெற்ற நேட்டோ உச்சி மாநாட்​டின் போது, ஈரானின் தாக்​குதல் அச்​சுறுத்​தல் காரண​மாக உணவுப்​பொருள் கொண்டு செல்​லும் வாக​னத்​தில் ட்ரம்ப் ரகசியமாக அழைத்​துச் செல்​லப்​பட்டு வேறு விமானத்​துக்கு மாற்றப்​பட்​ட​தாக தகவல்​கள் வெளி​யானது குறிப்​பிடத்​தக்​கது. அதை குறிப்​பிட்​டுத்​தான் இப்​ராஹிம் இவ்​வாறு தெரி​வித்​துள்​ளார்.


Hindu Tamil 1 hour ago
Home Flash News