சயீம் அயூப் உடன் சேவாக்கை ஒப்பிடுவதா? - நாசர் ஹுசைனின் தராதரமற்ற ஒப்பீடு
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியில் சயீம் அயூப் என்ற பேட்டரை பாகிஸ்தான் அணி திடீரென அழைத்து, அவர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் டக் அடித்ததையும் 2011-ல் சேவாக் இதே போல் அழைக்கப்பட்டு எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் டக் அடித்ததையும் தராதரமற்ற ஒப்பீடு செய்துள்ளார் முன்னாள் இங்கிலாந்து கேப்டனும் தற்போதைய வர்ணனையாளருமான நாசர் ஹுசைன்.
சயீம் அயூபை நேரடியாக பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20-யிலிருந்து டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அழைத்தனர். அவர் இரண்டு டக் அவுட் ஆனார். இதனைக் குறிப்பிட்ட நாசர் ஹுசைன், “இது டெஸ்ட் கிரிக்கெட் மீதான ஒருவிதமான அவமரியாதை மற்றும் அலட்சியமாகும். எந்தவொரு கிரிக்கெட் வீரரும் சொல்வது போல, டெஸ்ட் கிரிக்கெட் தான் மிகவும் சவாலான வடிவம். இங்கிலாந்தில் தொடக்க வரிசையில் பேட்டிங் செய்வது மிகக் கடினமான பணியாகும்; அப்படிப்பட்ட நிலையில், உலகின் ஏதோ ஒரு பகுதியிலிருந்து ஒருவரை வரவழைத்து, ‘வாழ்த்துகள்’ என்று சொல்லி களமிறக்கிவிட முடியும் என்று நினைப்பது சரியல்ல.” என்று ஒரு நாட்டின் முடிவை கிரிக்கெட்டுக்கு அவமரியாதை என்று விமர்சிக்கிறார். இதற்கு நாசர் ஹுசைனுக்கு உரிமையில்லை.